இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின நிகழ்வு!

0
79

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின நிகழ்வு கொட்டகலை நகர விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின நிகழ்வு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.

கொட்டகலையில் இடம்பெற்ற மேதின நிகழ்விற்கு பிரதம அதிதியாக நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டதோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு சுமுக அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், வெளிநாட்டு மற்றும் தொழிலாளர் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ்க நானயகார, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவியாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரன், மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி நஷிர் மற்றும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பி.சக்திவேல், எஸ்.பிலிப். முன்னாள் பிரதேசசபையின் தலைவர்கள், உறுப்பினர்கள் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் 1700 ரூபாய் வழங்க அமைச்சரவையில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன் போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முதலில் நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நாங்கள் கடந்த காலங்களில் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கி தற்போது நல்லதொரு நிலைமைககு வந்துள்ளோம்.

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாவாக சம்பளத்தை அதிகரித்தோம் அஸ்வெசும கொடுப்பணவை அதிகரித்தோம் நாங்கள் தற்போது அரிசிகளை வழங்கியுள்ளோம்.

சுற்றுலாபயணிகளின் வருகை நாட்டுக்கு அதிகரித்தமையினால் சுற்றுலாதுறையின் வருமானம் அதிகரித்து பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் எமக்கு நன்றாக தெரியும் நான் பிரதமர் தினேஸ்குணவர்தனவிடம் கலந்துரையாடியுள்ளேன் லயன் தொகுதிகளை இல்லாது செய்து புதிய வீடமைப்பு திட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளேன்.

பல்கலைகழங்களில் விஞ்ஞான பாடங்களை கற்பிக்க இன்று ஆசிரியர்களின் பற்றாக்குறை காணப்படுகிறது அதற்கு தீர்வுகள் எட்டப்பட்டுள்ளது.

நான் மலையக மக்களின் பிரச்சினைகளை ஒரு போதும் நான் மறக்கமாட்டேன் மலையக மக்களின் உரிமைகளை மேலும் நான் அபிவிருத்தி செய்வேன் 1982 ஆம் ஆண்டு அமரர் செளமிய மூர்த்தி தொண்டமானின் வேண்டுகோளுக்கினங்க நான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் மலையக பெருந்தோட்ட பாடசாலைகளை நான் அபிவிருத்தி செய்தேன் என தெரிவித்தார்.