கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் இணைந்த அமெரிக்கா – ரஷ்யா

0
539
Two flags

கைதிகளை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவும், ரஷ்யாவும் விடுதலை செய்துள்ளன.

இது தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தாவது,

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் காவல்துறை அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் ட்ரெவர் ரீடை ரஷ்யா விடுவிக்கிறது.

மாறாக, 2010ல் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஷ்ய விமானி கான்ஸ்டான்டின் யாரோஷென்கோவை விடுதலை செய்து திருப்பி அனுப்ப அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க-ரஷ்யா உறவுகளில் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமைதி காலத்தில் அரிதாகவே கைதிகள் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.