அமெரிக்காவில் உள்ள மிகச்சிறிய தீவில் அமைந்துள்ள உலகின் ஒரே தனி வீடு ரூ.2.50 கோடிக்கு விற்கப்பட உள்ளது.
சிறிய மற்றும் மக்கள் வசிக்காத டக் லெட்ஜஸ் தீவு அமெரிக்காவின் மைனே மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த தீவில், 2009ல், 540 சதுர அடியில், சிறிய வீடு கட்டப்பட்டது.இதில், ஒரு படுக்கையறை மற்றும் ஒரு குளியலறை மட்டுமே உள்ளது.
இருப்பினும், அறையின் உட்புறம் மிகவும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் தங்குபவர்கள் மற்றவர்களின் இடையூறு இல்லாமல் கடலின் அழகை முழுமையாக அனுபவிக்க முடியும். இது ஒரு வெறிச்சோடிய தீவில் இருப்பதால், இது “உலகின் தனிமையான வீடு” என்று அழைக்கப்படுகிறது. அந்த வீடு ரூ.2.50 கோடிக்கு விற்கப்படும் என்று தெரிய வந்தது.