இலங்கை, ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு

0
425

சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என கோரி ரத்துபஸ்வல பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஏப்ரல் 23 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கம்பஹா உயர்நீதிமன்றத்தில், மேனகா விஜேசுந்தர, நிமல் ரனவீர மற்றும் நிஷாந்த ஹபுராச்சி ஆகிய மூன்று பேர் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதியரசர்கள் குழாமில் நீதியரசர் நிமல் ரனவீர விடுப்பில் இருந்ததால் வழக்கு ஏப்ரல் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், சுத்தமான குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் 45 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் நான்கு இராணுவ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.