சசிகலாவுக்கு தீவிர நிமோனியா காய்ச்சல்

0
360

மூச்சுத்திணறலால் பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருக்கிறது.

சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சனைகளும் சசிகலாவுக்கு உள்ளன. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை கூறியுள்ளது.