பத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்

0
916
Journalist Jalalzoshi murder Criminals surely punished Saudi prince

சவுதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால்கசோஜி, அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை. Journalist Jalalzoshi murder Criminals surely punished Saudi prince

சவுதி அரசை கடுமையாக விமர்சிப்பவர்களில் முக்கியமானவராக இருந்த பத்திரிகையாளர் ஜமால்கசோஜி கொலை செய்யப்பட்டது சவுதி உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளால் பல நாட்களுக்கு முன்னதாவே திட்டமிடப்பட்ட ஒன்று என்று துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் முன்பு தெரிவித்தார்.

இந்நிலையில் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் ஜமால்கசோஜி கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டபிறகு முதல்முறையாக இது குறித்து தற்போதுதான் இளவரசர் முகமது பின் சல்மான் பேசியுள்ளார்.

துருக்கியில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் ஜமால்கசோஜியின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளை நிச்சயம் கடுமையாக தண்டிக்க தான் உறுதியாக இருப்பதாக சவுதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

ரியாத்தில் நடைபெற்ற ஒரு முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், ”அனைத்து சவுதி மக்களுக்கும் வலி தருவதாக இந்த குற்றம் நடைபெற்றுள்ளது, “கசோக்கி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள்” என குறிப்பிட்டார். மேலும், “கசோக்கி படுகொலையை தொடர்ந்து எழுந்துள்ள பரபரப்பு, சவுதி அரேபியாவின் சீர்திருத்த நடவடிக்கைகளை தடம் புரளச்செய்து விட முடியாது” எனவும் கூறினார்.

இந்த கொலை ”நியாயப்படுத்த முடியாத ஒரு கொடூரமான குற்றம்” என்றும் தெரிவித்த அவர், ”இந்த குற்றத்துக்கு பின்னால் இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இறுதியில் நீதியே வெல்லும்’ என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நடைமுறையில் சவுதி அரேபியாவை ஆளுகிறவர், இளவரசர் முகமது பின் சல்மான்தான். எனவே கசோக்கி மரணத்துக்கு காரணமான நடவடிக்கைக்கு இறுதி பொறுப்பை அவர்தான் ஏற்க வேண்டும்” என்று கூறினார். இது இளவரசர் முகமது பின் சல்மானுக்கு டிரம்ப் கொடுத்த அழுத்தமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags ;- Journalist Jalalzoshi murder Criminals surely punished Saudi prince

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்