வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்; எடப்பாடி

0
216
Edappadi Palaniswami told precautions ready face

பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். (Edappadi Palaniswami told precautions ready face)

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

மதுரையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அப்போது தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கையில்,

‘திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை அதிமுக ஆரம்பித்துள்ளது. மதுரை மாவட்டம் அதிமுகவுக்கு ராசியான மாவட்டம். இங்கு தொட்டது துலங்கும்.

ஆர்.கே.நகர் போன்ற நிலை திருப்பரங்குன்றத்தில் நடக்காது. தற்போதைய நிலையில் நாங்கள் யாருடனும் கூட்டணியில் இல்லை. தனியாக இருக்கிறோம். தேர்தல் வரும்போது கூட்டணி பற்றி முடிவு எடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம், மழை முன்னச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அரசியல் குறித்த கேள்விகளுக்கும் முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க பிரதமரை சந்திக்க உள்ளேன்.

பருவமழை முன்னெச்சரிக்கைப் பொருத்தவரை 3 முறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை வழங்கப்பட்டு, தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் கருத்து தெரிவிக்கலாம்’ என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியினருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்கியதாகவும், தேர்தல் எப்போது வந்தாலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Edappadi Palaniswami told precautions ready face