ஜெனிவா தீர்மானம் தொடர்பில் பிரிட்டன் அமைச்சர் கருத்து!

0
465

ஜெனீவா தீர்மானத்தை இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடாக சித்தரிக்கும் சிலர் உள்ளனர் என பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அலுவலகத்தின் ஆசிய பசுபிக்கிற்கான அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். Geneva Motion British Minister Statement Sri Lanka Tamil News

இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கையின் ஆங்கிலநாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது துரதிஸ்டவசமான நேர்மையற்ற நிலைப்பாடு என குறிப்பிட்டுள்ள மார்க் பீல்ட் இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் முக்கியமான கட்டமைப்பை வழங்கும் தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்குவது என்ற இலங்கை அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான முடிவை பிரிட்டனும் இலங்கையின் ஏனைய நண்பர்களும் அங்கீகரிக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான திட்டங்களுடன் நல்லிணக்க முயற்சிகளை முன்னோக்கி நகர்த்துமாறு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்துவேன் எனவும் இந்த முயற்சிகளிற்கான பிரிட்டனின் உறுதியான ஆதரவை வழங்குவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!

மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!

Tamil News Live

Tamil News Group websites