மன்னாரில் 77ஆவது தடவையாக எலும்புக்கூடுகள் அகழ்வு!

0
436

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் இன்று திங்கட்கிழமை 77 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்றது. Mannar Human Skeleton Excavation Sri Lanka Tamil News

மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் கடந்த 21 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை 77ஆவது தடவையாக மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவண ராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 76 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்ற நிலையில் தொடர்ச்சியாக பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சுமார் 9 நாட்களின் பின்னர் இன்று திங்கட்கிழமை 77 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை 141 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் 135 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்வு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளமையினால் அகழ்வு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு

அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

Tamil News Live

Tamil News Group websites