வீதி விபத்துக்களில் உயிரிழப்போர் எண்ணிக்கை தமிழ் நாட்டில் அதிகரிப்பு

0
525
tamilnadu top list Pedestrians died road accident

இருசக்கர வாகனங்களில் செல்வோர் உயிரிழப்பு, பாதசாரிகள் உயிரிழப்பு இரண்டிலுமே தமிழ் நாடு முதலிடத்தில் உள்ளது. (tamilnadu top list Pedestrians died road accident)

வீதி விபத்துக்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதால் அதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்தும் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் அதனையும் மீறி வீதி விபத்துக்கள் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இருசக்கர வாகன விபத்து, சைக்கிள் விபத்து மற்றும் வீதிகளில் நடந்து செல்வோர் விபத்தில் சிக்குவது போன்றவை மிகவும் அதிகமாக உள்ளது.

கடந்த ஆண்டு மாத்திரம் இந்தியாவில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 48 ஆயிரத்து 746 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 40 ஆயிரத்து 950 ஆக இருந்தது தற்போது இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.

அதேபோன்று 2014 இல் வீதியில் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது 12 ஆயிரத்து 330 ஆக இருந்தது.

இது தற்போது, 20 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளதுடன், 66 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதன்படி தினமும் 56 பாதசாரிகள் வரை வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

சைக்கிளில் செல்வோர் உயிரிழப்பு சற்று குறைந்துள்ளதுடன், 2014 இல் இதன் எண்ணிக்கை 4 ஆயிரத்து 37 ஆக இருந்தது.

தற்போது, அது 3 ஆயிரத்து 559 ஆக குறைந்துள்ளது. சைக்கிள் பயன்படுத்துவது குறைந்திருப்பது இதற்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் உயிரிழப்பு, பாதசாரிகள் உயிரிழப்பு இரண்டிலுமே இந்தியாவில் தமிழ்நாடு தான் முன்னணி இடத்தில் உள்ளது.

தமிழ் நாட்டில் கடந்த ஆண்டு மாத்திரம் 6 ஆயிரத்து 329 பேர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதில் 2 ஆவது இடத்தை உத்தரப் பிரதேசம் பெற்றுள்ளது.

அங்கு 5 ஆயிரத்து 699 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆவது இடத்தை பெற்றுள்ள மராட்டியத்தில் 4 ஆயிரத்து 659 பேர் உயிரிழந்திருக்கிறனர்.

அதேபோன்று கடந்த ஆண்டு தமிழ் நாட்டில் 3 ஆயிரத்து 507 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். இதில் மராட்டியம் 2 ஆவது இடத்தை பிடிக்கின்றது.

அங்கு 1831 பேரும், 3 ஆவது இடத்தை பிடித்துள்ள ஆந்திராவில் 1379 பேரும் உயிரிழந்திருக்கிறனர். பாதசாரிகள் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் வீதி ஆக்கிரமிப்பு தான் என்று தெரியவந்துள்ளது.

கடைகள், வாகனங்கள் வீதியோர நடைபாதைகளை ஆக்கிரமித்து இருப்பதால் மக்கள் வீதியில் இறங்கி நடக்க வேண்டியது உள்ளது. அப்போதே விபத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; tamilnadu top list Pedestrians died road accident