கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறும் வீதிகள்

0
472
Jana Balaya Colombata Main rally colombo

கூட்டு எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு பேரணிக்காக பல பகுதிகளில் இருந்து வருகைதரும் மக்கள் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒன்று கூடவுள்ளனர். (Jana Balaya Colombata Main rally colombo)

பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை, அரச மர சந்திப் பகுதியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் இந்த பேரணியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பேரணியில் கலந்துகொள்வதற்காக ஆமர் வீதி, டெக்னிகல் சந்தி, ஒல்கோட் மாவத்தை ஊடாக சில மாவட்ட மக்கள் லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரை மக்கள் பேரணியாகச் செல்லவுள்ளனர்.

மேலும் மருதானை, டீ.ஆர். விஜேவர்தன மாவத்தை ஊடாகவும், கொம்பனிவீதி ஊடாகவும் லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரை நடை பயணமாக செல்லவுள்ளனர்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மாகாண ரீதியாக பிரிந்து 06 ஊர்வலங்களாக லேக் ஹவுஸ் சுற்றுவட்டப் பகுதியில் ஒன்று கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Jana Balaya Colombata Main rally colombo