பிரபல ஹீரோயின்களின் கனவை நனவாக்கும் ரஜினி

0
312
Rajini Karthik Subburaj next movie heroines tamil news

ரஞ்சித்தின் காலா மற்றும் ஷங்கரின் 2.0 படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. Rajini Karthik Subburaj next movie heroines tamil news

பெயரிடப்படாத இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதாகவும், மற்றுமொரு ஜோடியாக திரிஷா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் இத்தனை காலம் வெற்றி ஹீரோயின்களாக வலம் வந்தும், சூப்பர் ஸ்டாருடன் இணையாத இந்த இரு ஹீரோயின்களும் இணைவது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

ரஜினி படத்தில் நடிப்பது இரு ஹீரோயின்களுடைய நீண்ட நாள் கனவு. இந்த கனவு கார்த்திக் சுப்புராஜ் மூலம் நனவாகப் போகிறது.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க, வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய வேடங்களில் பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

Tag: Rajini Karthik Subburaj next movie heroines

எமது ஏனைய தளங்கள்