வாஜ்பாய்க்கு தமிழ் பிடிக்குமா? ஏன் தெரியுமா?

0
532

அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு எளிய மனிதர் வாஜ்பாய். எளிமையின் மொத்த உருவமும் வாஜ்பாய்தான். மிக சிறந்த அரசியல் நாகரிகம் மிக்க பண்பாளர். Indian Former Prime Minister Vajpayee Likes Tamil 

இவருக்கு தமிழ் என்றால் கொள்ளைப்பிரியம் , இதை நேரடியாக இவரே கூறியும் இருக்கிறார்.

ஆம்! புதுடெல்லி ரெய்ஸினோ ரோடு! வாஜ்பாய் பதவி விலகிய மறுநாள்! அவருடன் பத்திரிகையாளர் சார்பாக ஒரு பிரத்யேக பேட்டி எடுக்கப்பட்டது.

அப்போது அவரிடம் ஒரு முக்கிய கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்வி தமிழ் மொழி குறித்துதான்.

அதற்கு காரணம், மக்களவையில் பாரதியின் கவிதை வரிகளை சொல்லி வாஜ்பாய் அப்போது பேசியிருந்தார்.

மக்களவையில் பாரதியின் கவிதை வரிகளை எடுத்து சொன்னீர்கள்? ஆனால் தமிழகத்தில் நீங்கள் ஒரு இந்தி வெறியர் என்ற கருத்து நிலவுகிறதே, உங்களின் விளக்கம் என்ன? என வாஜ்பாயிடம் வினவப்பட்டது.

நானா இந்தி வெறியன்? பாரதியை பற்றி நான் பேச காரணம், இந்தியாவில் மிகப்பெரிய கவிஞர்களில் சுப்பிரமணிய பாரதியும் ஒருவர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற விஷயம் குறித்து வெளிப்படுத்தவும், அதை முழுமையான உணர்வுகளில் சொல்லவும், “முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புது ஒன்றுடையாள் – இவள் செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என்ற பாரதியின் கவிதையை சொல்வதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. (பாரதியின் இந்த கவிதை வரிகளை இந்தி எழுத்துக்களில் எழுதி வைத்து படித்து காட்டினார் வாஜ்பாய்.

தமிழில் என்னால் பேச முடியாமல் போனாலும் தமிழ் இலக்கியத்தின் வளம் குறித்து எனக்கு நன்றாக தெரியும்.

பாரதியின் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளை ஒன்றுவிடாமல் நான் படித்திருக்கிறேன். அப்படி படிக்கும்போது, அவரது படைப்புகளின் ஆழத்தையும், அரும்பெரும் கருத்துக்களையும் என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.

ஒவ்வொரு இந்தியனும் நான் உட்பட பழமையும், வளமும் கொண்ட தமிழ்க் கலாச்சாரத்தை பற்றியும் தமிழ் நாகரீகத்தை பற்றியும் பெருமை கொள்வதில் நியாயம் உண்டு என கூறி செய்தியாளர்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் மெய்சிலிர்க்க செய்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites