பங்களாதேஷில் வீதி விபத்திற்கு மரண தண்டனை!

0
306
Death penalty street accident Bangladesh tamil news

பங்களாதேஷில் அதிக அளவில் வீதி விபத்துகளும் அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. கடந்த 29-ந் தேதி நடந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். Death penalty street accident Bangladesh tamil news

அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் அவர்கள் பலியாகினர். எனவே, வீதி பாதுகாப்பு சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

உயிரிழப்பு ஏற்படுத்துவோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமாக வலியுறுத்தப்பட்டது.

கடந்த 10 நாட்களாக தலைநகர் டாக்காவில் நடந்த போராட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 8 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வீதி மறியல் போராட்டமும் நடந்தது. டாக்கா உள்பட மற்ற பகுதிகளுக்கும் போராட்டம் பரவியது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசினர். அதில் மாணவர்கள் காயம் அடைந்தனர்.

இருந்தும் போராட்டம் ஓயவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தலைநகர் டாக்கா ஸ்தம்பித்தது.

மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பங்களாதேஷ அரசு முடிவு செய்தது. அதை தொடர்ந்து மாணவர் பிரதிநிதிகளை அழைத்து அதிகாரிகள் பேச்சு வார்ததை நடத்தியுள்ளனர்.

முடிவில் வீதி விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன சாரதிகளுக்கு தூக்குதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

இதேவேளை, உலகில் வீதி விபத்திற்கு மரண தண்டனை வழங்குவது மிகவும் அரிதென்பது குறிப்பிடத்தக்கது.

tags :- Death penalty street accident Bangladesh tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்