Tour de France 2018 துவிச்சக்கர வண்டி ஓட்டப்போட்டி சம்பியன்!

0
313
Tour de France 2018 champion 

நேற்று ஞாயிற்றுக்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற்ற Tour de France துவிச்சக்கரவண்டி ஓட்டப்போட்டியின், இறுதி சுற்றில், 32 வயதான Geraint Thomas வெற்றிவாகை சூடினார். Tour de France 2018 champion

இதில் Tour de France வெற்றியாளருக்கு வழங்கப்படும் மஞ்சள் நிற உடை Geraint Thomas க்கு கிடைத்தது. நடப்பு சாம்பியன் மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Chris Froome, ஒரு சில நொடிகள் வித்தியாசத்தில் மூன்றாவது இடத்தை பிடித்தார். இரண்டாவது இடத்தை 27 வயதுடைய Tom Dumoulin பெற்றார்.

அதேவேளை, மஞ்சள் ஜெர்சி உடையை Geraint Thomas உம், பச்சை ஜெர்சியை Peter Sagan உம், Polka Dot ஜெர்ஸியை Julian Alaphilippe என்பவரும் பெற்றுக்கொண்டனர்.

அதேவேளை, நேற்று சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற்ற 21 ஆவது கட்ட இறுதிச் சுற்றில் 31 வயதான Alexander Kristoff வெற்றி பெற்றார்.

மேலும், கடந்த ஜூலை 7 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பித்த போட்டிகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 29 ஆம் திகதி நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

tags :- Tour de France 2018 champion

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்