ஜப்பானை தாக்கிய ‘ஜாங்டரி’ புயல்

0
272
Jangguri storm hit Japan tamil news

ஜப்பான் நாட்டை நேற்யை தினம் தாக்கிய ஜாங்டரி புயலால் 16 பேர் படுகாயமடைந்ததுடன் புகையிரத சேவையும் பல விமான சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன. Jangguri storm hit Japan tamil news

நேற்றைய தினம் ஜப்பானை தாக்கிய‘ஜாங்டரி’ புயலினால் தலைநகர் டோக்கியோ மற்றும் நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மணிக்கு 90 கிலோமீற்றர் முதல் 120 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக நேற்று இரண்டாவது நாளாகவும் பல விமான சேவைகளும் புகையிரத சேவைகளும் பல இடங்களில் இரத்து செய்யப்பட்டன. அத்துடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதுடன் ஒகயாமா, ஹிரோஷிமா மாகாணங்களில் பெய்து வரும் அடை மழை காரணமாக வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தகம் காரணமாக அப் பகுதியில் 16 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் ஷோபரா நகரில் 36 ஆயிரம் மக்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேற்கு ஜப்பானில் குரே உள்ளிட்ட நகரங்களில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளும், நிவாரணப் பணிகளும் அங்கு தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

tags :-  Jangguri storm hit Japan tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்