கிழக்கு மக்களுக்கு ரணிலிடமிருந்து இனிப்பான செய்தி!

0
737

கிழக்கு மாகாணத்துக்கான புதிய உள்நாட்டு விமான சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க, நான்கு நிறுவனங்கள் விருப்பம் வெளியிட்டுள்ளன. East Province Domestic Flight Services Begin Soon Tamil News

மட்டக்களப்புக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு, சிறந்த வான் வழி இணைப்பு முக்கியமான தேவையாக இருக்கிறது. போக்குவரத்து குறைபாடு தான், கிழக்கில் சுற்றுலா அபிவிருத்திக்கு உள்ள பிரதான தடைக்கல்லாக, அடையாளம் காணப்பட்டுள்ளது. மத்தல விமான நிலைய அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு விமான சேவை மூலம் இந்தக் குறைபாட்டுக்கு தீர்வு காண முடியும் என கூறியுள்ளார்.

பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே இந்த கருத்தை வெளியிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites