கலிபோர்னியாவில் காட்டுத்தீ 3 தீயணைப்பு வீரர்கள் பலி

0
270
California firefighters 3 Wildfire kills

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் ரெட்டிங் என்ற பகுதிக்கு மேற்கே 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் இங்கு வியாழக்கிழமை காட்டுத்தீ ஏற்பட்டு அடுத்தடுத்து பரவியதனை அடுத்து வீடுகள் பல தீயில் கருகியுள்ளன. (California firefighters 3 Wildfire kills)

வேகமுடன் வீசிய காற்றால் காட்டுத்தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவி சூறாவளி தீ ஏற்பட்டுள்ளது. ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்ததினால் பல்வேறு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

மேலும் அப்பகுதியிலுள்ள 5000 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நகரே இருளில் மூழ்கியுள்ளது.

அப்பகுதியில் சுமார் 44450 ஏக்கர் பரப்பளவில் தீப்பிடித்து எரிவதால், அதனை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

தொடர்ந்து வேகமாகப் பரவிவரும் காட்டுத் தீயின் காரணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வரை 3 தீயணைப்பு வீரர்கள்உயிரிழந்துள்ளார்கள்.

சஸ்தா கவுண்டி பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 90,000 பேருக்கு தேவையான உணவுகளை வழங்கவும், பண்ணைகளில் இருந்து மீட்கப்பட்ட கால்நடைகளை பராமரிக்கவும் அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் அவசர உதவி தேவை என கலிபோர்னிய ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- California firefighters 3 Wildfire kills

மேலதிக உலக செய்திகள்

எமது ஏனைய தளங்கள்