“ஆளுநர் விட்ட பிழையை ஆளு­நரே சரி செய்ய வேண்டும்” முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் காட்டம்!

0
375
North Province Chief Minister Wigneswaran Latest Statement

ஒரு­ மா­கா­ணத்தின் ஆளுநர் தானே பிழை­செய்­து­விட்டு தன்­பி­ழையை வைத்து மாகாண ஆட்­சியை கலைக்க முடியும் என்றால் மத்­திய அர­சாங்கம் அதனைச் செய்தே சகல மாகா­ண­ச­பை­க­ளையும் கலைத்­து­வி­டலாம். ஆனால் அவ்­வாறு செய்ய முடி­யாது என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். North Province Chief Minister Wigneswaran Latest Statement

முத­ல­மைச்­ச­ருக்கு அமைச்­சர்­களை நியமிக் கும் அல்­லது பத­வி­ நீக்கும் உரித்து இல்லை என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் கூறி­யி­ருக்­கும்­போது அமைச்­ச­ர­வையை உரு­வாக்கு­வ­தற்­கான ஆலோ­ச­னையை நான் எவ்­வாறு வழங்­கு­வது? என சி.வி.விக்­கி­னேஸ்­வரன் கேள்வி ஒன்றையும் எழுப்பியுள்ளார்.

வட­மா­காண அமைச்­சர்கள் விவ­கா­ரத்தில் நீதி­மன்ற தீர்ப்பை அடுத்து எழுந்­துள்ள சர்ச்சை தொடர்­பான கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும்­போதே முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரிவித்திருக்கும் விடயம் ,

ஒரு மாகா­ணத்தின் ஆளுநர் தானே பிழை செய்து விட்டு தன் பிழையை வைத்தே மாகாண ஆட்­சியைக் கலைக்­க­மு­டி­யு­மென்றால் மத்­திய அர­சாங்கம் அதைச் செய்தே எல்லா மாகா­ண­ச­பை­க­ளையும் கலைத்­து­வி­டலாம். மேன்­மு­றை­யீட்­டு­மன்றின் தீர்ப்­புக்குக் காரணம் எமது ஆளுநர் அரச வர்த்­த­மா­னியில் டெனீஸ்­வ­ரனை நான் நீக்­கி­யது பற்றி பிர­சு­ரிக்­கா­மையே. வட­மா­கா­ண­சபை சார்­பாக கௌரவ ஆளுநர் தானே ஒரு முக்­கி­ய­மான செயலைச் செய்­யா­து­விட்டு அதை முன்­வைத்து வட­மா­கா­ண­ச­பையை கலைக்க சட்டம் இடம் கொடுக்­காது.

ஆளுநர் செய்த பிழையை ஆளு­நரே சரி செய்ய வேண்டும். டெனீஸ்­வ­ரனை நான் பத­வி­நீக்கம் செய்­ததை அரச வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­காத குறையை இப்­பொ­ழுதும் நீக்­கலாம். அதா­வது 2017 ஆகஸ்ட் 20 ஆம் திகதி தொடக்கம் பயன்­பாட்­டுக்கு வரும் வகையில் இப்­பொ­ழுதும் கடந்த காலத்தை அளா­விய விதத்தில் அரச வர்த்­த­மா­னியில் பிர­சுரம் இடம்­பெற ஆளுநர் நட­வ­டிக்கை எடுக்­கலாம். அதன் பின் குறித்த வர்த்­த­மானி அறி­வித்­தலை உச்ச நீதி­மன்­றத்­திற்கு எடுத்­துக்­காட்டி மேன்­மு­றை­யீட்டுத் தீர்­மா­னத்தைப் புறம் வைக்­கலாம் என கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites