யாழில் மனதை உருக்கும் சம்பவம்; பட்டதாரி இளைஞன் தற்கொலை

0
394

யாழ்ப்பாணம் தென்மராட்சி கல்வயல் பகுதியில் இளைஞன் ஒருவன் தற்கொலை செய்துள்ளார். (Graduate youth committed suicide Jaffna Thenmaradchi kalvayal)

படித்தும் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பட்டதாரியான குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை பதிவாகியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தற்கொலை செய்து கொண்டுள்ள இளைஞன் எழுதியுள்ள கடிதமொன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் ‘பல்கலைக்கழகப் படிப்பை முடித்தும் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்றும் தனது குடும்பத்துக்கு தான் ஒன்றுமே செய்யவில்லை என்றும் படித்தும் வேலை கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சத்தியசீலன் என்ற 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Graduate youth committed suicide Jaffna Thenmaradchi kalvayal