சாந்தியின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் – மனதை உருகவைக்கும் காட்சி

0
2405
housemate shanthy jaela Dubai house owner come Lankan

டுபாய்க்கு வீட்டுப்பணிப்பெண் வேலைக்கு சென்று சுகயீனமுற்ற நிலையில் நாடு திரும்பிய இலங்கை பணிப்பெண் உயிரிழந்த செய்தி கேட்டு துடித்த டுபாய் நாட்டின் வீட்டுரிமையாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் இலங்கைக்கு வருகை தந்து கண்ணீர் விட்டு நல்லடக்கம் செய்தமை அனைவரையும் வியக்க வைத்துள்ளது. (housemate shanthy jaela Dubai house owner come Lankan)

நீர்கொழும்பு ஜா-எல பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் டுபாய் நாட்டின் வீடொன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றி வந்துள்ளார்.

சிறிது காலத்தில் அவர் சுகயீனமுற்ற நிலையில் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுகயீனமுற்ற பெண்ணை அவரின் தாய் நாட்டிற்கு அனுப்பி வைப்பது உகந்த விடயமாகாது என கருதிய வீட்டு எஜமானிகள் அவரின் மருத்துவ செலவினை ஏற்று அவருக்கு சிகிச்சைக்கான உதவிகளை செய்து வந்துள்ளனர்.

இவ்வாறு காலம் செல்ல அவர், சுகவீனமடைந்து மரணித்துள்ளார்.

அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த, டுபாயில் குறித்த பெண் தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர் உட்பட ஆறு பேர் இலங்கை வந்திருந்தனர்.

டுபாயில் இருந்து வந்தவர்கள் அம்மா, அம்மா என கதறி அழுதபடி இலங்கை பெண்ணின் சவப்பெட்டி தோளில் சுமந்து சென்ற காட்சி அனைவரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

கப்புவத்தை பிரதேசத்தை சேர்ந்த சாந்தி பெரேரா என்ற இந்த பெண் நான்கு பிள்ளைகளை பராமரிக்கும் சேவைக்காக கடந்த 1981 ஆம் ஆண்டு டுபாய்க்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற பின்னர் மேலும் நான்கு பிள்ளைகள் என எட்டு பிள்ளைகளை பராமரிக்கும் பொறுப்பு சாந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.

சாந்தி திருமணமாகாதவர். தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சாந்தி நல்ல முறையில் நிறைவேற்றி வந்துள்ளார். 38 ஆண்டுகளாக சாந்தி, டுபாய் நாட்டில் ஒரே வீட்டில் தொழில் புரிந்து வந்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு சாந்திக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

டுபாய் வீட்டின் உரிமையாளர்கள் அவரை அங்கு வைத்தே சிகிச்சையளித்து வந்துள்ளனர். சாந்தி சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் அவரது சகோதரர் டுபாய் வந்து செல்ல பயண ஏற்பாடுகளையும் அவர்கள் இலவசமாக செய்து கொடுத்துள்ளனர்.

இருந்தபோதும், உடல் நிலை குணமாகாத காரணத்தில் சாந்தியின் கோரிக்கைக்கு அமைய இலங்கையில் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.

குணமடைந்ததும் மீண்டும் தமது வீட்டுக்கு வர வேண்டும் என்ற உறுதிமொழியுடன் சாந்தியை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.

சாந்திக்கு அவரது சகோதரர் முடிந்த அனைத்து சிகிச்சைகளையும் செய்துள்ளார். எனினும் நாளுக்கு நாள் உடல் மோசமடைந்து வந்ததுள்ளது. அதனால், அவர் இறக்கும் வரை வருடந்தோறும் டுபாய் நாட்டில் இருந்து வந்து சாந்தியை பார்த்து விட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அண்மையில் சாந்தி இறந்த செய்தி கிடைத்ததும் சாந்தி வளர்த்த பிள்ளைகள் மற்றும் வீட்டின் உரிமையாளர் என 6 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இவர்கள் சாந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தோளில் சுமந்தவாறு அம்மா, அம்மா என அழுது புலம்பியவாறே சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.

பின்னர், புதைகுழிக்கு அருகில் 6 பேரும் தம்மை வளர்த்த வளர்ப்பு தாயின் ஆத்மா சாந்தியடைய குர் ஆனை ஓதியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்காக செல்பவர்கள் உடம்பில் ஆணி ஏற்றப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளான நிலையில் நாடு திரும்புகின்றனர்.

அது மாத்திரமின்றி சிலர் வௌிநாடுகளில் சிரச்சேதமும் செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில் டுபாய் தொழில் தந்த குறித்த குடும்பத்தினரின் இலங்ககைக்கு வருகை தந்து சாந்தியை நல்லடக்கம் செய்யும் வரை துணைபுரிந்து அவரின் சடலத்தினை மயானம் வரை சுமந்து செல்லும் காட்சி அனைவரையும் கண்ணீர்விடச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- housemate shanthy jaela Dubai house owner come Lankan

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites