குடும்பத் தலைவர் மலசலக்கூட குழியில் இருந்து சடலமாக மீட்பு!

0
445
tamilnews head family head pit cut build toilet Batticaloa

(tamilnews head family head pit cut build toilet Batticaloa)

மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதேசத்தில் மலசலக்கூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழி ஒன்றிலிருந்து குடும்பத் தலைவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

பெரியகல்லாறு பிரதான வீதி கொம்பச்சந்தியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான 48 வயதான 4 பிள்ளைகளின் தந்தையான இராசதுரை துவேந்திரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறிச் சென்று, சனிக்கிழமை காலை வரை வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவரை தேட ஆரம்பித்துள்ளனர்.

இந்தநிலையில், பெரிகல்லாறு கடலாட்சியம்மன் வீதியின் பின்புறத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மலசலக்கூட குழியில் அவர் சடலமாக இருப்பதை உறவினர்கள் கண்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- tamilnews head family head pit cut build toilet Batticaloa
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites