லிந்துலை நகர சபை தலைவர் அசோக சேபால கைது

0
552
lindula municipal president arrested

தலவாக்கலை- லிந்துலை நகர சபையின் தலைவரும், மலையக தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளருமான அசோக சேபால கைது செய்யப்பட்டுள்ளார். lindula municipal president arrested

சிறுமியொருவரை கடத்திய சம்பவம் தொடர்பிலேயே தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபால கைது செய்யப்பட்டுள்ளார்.

அசோக சேபாலவுடன், தலவாக்கலை லிந்துலை நகரசபையின் மற்றுமொரு உறுப்பினர் உள்ளிட்ட மேலும் மூன்று பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் நுவரெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நால்வரும் இன்றைய தினம் நுவரெலியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

பணத்திற்காக சிறுமியொருவரை கடத்தியதாக இந்த நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை