காவிரி விவகாரத்தில் அணிலாகவும் பாலமாகவும் செயல்படுவேன் – கமல்

0
441
Peoples Judicial recognized Election Commission political party

connection Cauvery issue said team case Cauvery

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் காவிரி விவகாரத்தில் அணிலாகவும் பாலமாகவும் செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பெங்களூரு சென்றிருந்தார். இன்று காலை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்த கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன்,

நான் ஒரு அரசியல் கட்சி தலைவராக இங்கு வரவில்லை, மக்களின் பிரதிநிதியாக வந்துள்ளேன் என்றார். குறுவை சாகுபடிக்கான காலம் வந்துவிட்டதாகவும், அதனை நினைவுபடுத்தி அதற்கு தேவையான தண்ணீரை திறந்து விடக்கோரி, இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறியுள்ளார். மேலும், அரசியல் தேவைகளை விட விவசாயிகளின் தேவையே மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு மிகவும் நல்ல முறையில் நடைபெற்றதாகவும், இரு மாநிலங்கள் மட்டுமன்றி, தேசிய அளவிலான பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் எனவும் கமல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியுடனான இந்த சந்திப்பு கூட்டணி குறித்தது அல்ல, மக்களின் நலனுக்கானது, காவிரி விவகாரத்தில் அணிலாகவும் பாலமாகவும் செயல்படுவேன் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.

connection Cauvery issue said team case Cauvery

More Tamil News

Tamil News Group websites :