நோர்வேயை தொடர்ந்து சுவிஸ்ஸிலும் ‘காலா’ தடை??

0
1511

(Switzerland ban super star movie following Norway)

நடிகர் .ரஜனிகாந்த்தின் சர்ச்சைக்குரிய கருத்தை தொடர்ந்து, நோர்வேயை அடுத்து சுவிஸ்ஸிலும் ‘காலா’ படம் தடை செய்யப்படும் நிலை எழுந்துள்ளது.

“போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ் நாடே சுடுகாடாகும்” என்ற ரஜனிகாந்த்தின் வசனம் இன்று உலகம் வாழ் தமிழர்களிடையே பெரிய சர்ச்சையையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் உணர்வலைகளை புரிந்து கொள்ளாத இவர், எவ்வாறு தன் அரசியல் வாழ்க்கையில் தமிழர்களுக்கு நன்மை செய்வார் என்ற கேள்வியை இவரது கருத்து எழுப்பியுள்ளது.

உலகம் வாழ் தமிழர்களின் பல கோடிகளைப் பணமாகவும், ஊதியமாகவும் பெறும் இவரின் அண்மைக்கால அரசியல் வருகையும், ஆன்மீக அரசியல் நிலைப்பாடும் அதிருப்தியை தருவதாக தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

தூத்துக்குடியில் நடந்த உணர்வு போராட்டத்தின் கலவரத்திற்கு எதிராகவோ, இத்தனை வருடங்களாக, இனப்படுகொலைகளுக்குப் பின்பும் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்காத நடிகர் ரஜனிகாந்ததின் படங்களை இனியும் ஆதரிக்காது பாடம் புகட்ட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டு இதனை தாம் செய்வதாக தமிழ் உணர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நோர்வே, சுவிஸ் போன்று தமிழர் வாழும் ஏனைய நாடுகளும் காலா படத்தை தடை செய்யுமா என்பதே கேள்வி!!

 

Switzerland ban super star movie following Norway, Switzerland ban super star movie, Switzerland ban super star, ban super star movie following Norway, ban super star movie, Tamil Swiss news, Swiss Tamil news, Kaala movie ban

Tamil News Groups Websites