ஊதியம் ஒரு இடத்தில், பணியாற்றுவது இன்னொரு இடத்தில் – ஆசிரியர்களுக்கு வலியுறுத்தல்

0
494
Employees working outside Northern Province salary Northern Provincial

(Employees working outside Northern Province salary Northern Provincial)

வடமாகாண சபையில் ஊதியம் பெற்றுக் கொண்டு வட மாகாணத்திற்கு வெளியே பணியாற்றும் ஊழியர்கள், வட மாகாணத்திற்குள்ளேயே சேவையாற்ற வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இல்லையேல் அவர்களுக்கான ஊதியத்தை வட மாகாணசபை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா வலியுறுத்தியுள்ளார்.

வடமாகாண சபையில் ஊதியம் பெற்றுக் கொண்டு வட மாகாணத்திற்கு வெளியே பணியாற்றிக் கொண்டிருக்கும் முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக மாகாண முதலமைச்சரிடம் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா வாய்மொழி மூல கேள்வி ஒன்றை கேட்டிருந்ததுடன், பிரேரணை ஒன்றையும்
சபைக்கு சமர்பித்து உரையாற்றும்போதே எதிர்கட்சிதலைவர் சி.தவராசா மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவருடைய வாய்மொழி மூல கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் வடமாகாணத்திற்கு வெளியே 68 முன்பள்ளிகளில் பணியாற்றும் 90 ஆசிரியர்களுக்கு வடமாகாண சபை ஊதியம் கொடுப்பதாகவும் இந்த கொடுப்பனவுகள் முன்னாள் ஆளுநர் சந்திரசிறியினால் அங்கீகரிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் யூன் மாதம் 31ம் திகதியுடன் அந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என ஆசிரியர் களுக்கும், முன்பள்ளிகளுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து வட மாகாண சபையில் ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கும்
சிற்றூழியர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்படவேண்டும் எனக்கோரி பிரேரணை ஒன்றைச் சமர்பித்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அஸ்மின் 1990 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கே அந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன அவர்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறும் வரையில் அவர்களுடைய கொடுப்பனவுகள் நிறுத்தப்பட கூடாது.

அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டும். என கேட்டிருந்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா வடமாகாணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு வடமாகாணத்திற்கு வெளியே பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்கள் தொடர்பாக முன்னர் பேசப்பட்டுள்ளது.

அதன்படி அவர்கள் வடமாகாணத்திற்குள் வரவேண்டும் அல்லது அவர்கள் தற்போதுள்ள மாகாணத்துடன் இணைய வேண்டும் என கேட்கப்பட வேண்டும். அதற்கு ஒரு கால அவகாசம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அதன் பின்னரும் அவர்களிடமிருந்து சாதகமான சமிக்ஞை கிடைக்காவிட்டால் ஊதியத்தை நிறுத்தலாம் என்று தெரிவித்தார்.

(Employees working outside Northern Province salary Northern Provincial)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :