சென்னை மெட்ரோ ரயிலில் 4 நாட்களாக தொடர்ந்து இலவச பயணம்!

0
898
free trips chennai Metro train 4 days

free trips chennai Metro train 4 days

சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம், நேரு பூங்கா இடையேயான வழித்தடத்திலும், சின்னமலை, டிஎம்எஸ் இடையேயான வழித்தடத்திலும் கடந்த 25ந் தேதி மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதை முன்னிட்டு கடந்த 4 நாட்களாக மெட்ரோ ரயில்களில் கட்டணமின்றி பயணிக்க மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மெட்ரோ ரயிலில் பயணிக்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். 25ம் தேதி 50 ஆயிரம் பேரும், 26ம் தேதி 1 லட்சத்து 20 ஆயிரத்து 500 பேரும் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணித்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை 1 லட்சத்து 84 ஆயிரத்து 518 பேர் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணித்துள்ளனர். மெட்ரோ ரயிலில் 4வது நாளான நேற்றும் இலவச சேவை வழங்கப்பட்டது.

More Tamil News

Tamil News Group websites :