அத்தனகலு ஓய பெருக்கெடுப்பு – வௌ்ள அபாய நிலை – லக்‌ஷபான அவசர கதவு திறப்பு

0
582
tamilnews DMC danger leveled area due increase Atanakalai river

(tamilnews DMC danger leveled area due increase Atanakalai river)

அத்தனகலு ஓய பெருக்கெடுத்துள்ளதால் அந்த பிரதேசத்தில் வௌ்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக, நீர்கொழும்பு, ஜா-எல, கட்டான, மினுவங்கொட, கம்பஹா, அத்தனகல்ல பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, மா ஓயவின் நீர் மட்டம் வௌ்ள அபாய நிலையை அடைந்துள்ளது.

இதனால், படல்கம மற்றும் கிரிவுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய மலைநாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் அவசர கதவொன்று இன்று (25) முதல் திறக்கப்பட்டுள்ளது.

அந்த நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று மாலை வரை திறக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை அந்த இரண்டு வான் கதவுகளும் மூடப்பட்டன.

அந்த நீர்த்தேக்கத்தால் நீர் பெறும் பிரதேசங்களில் தொடர்ந்து மழை பெய்தால் ஏனைய வான் கதவுகளையும் திறக்க வேண்டி ஏற்படும் என்று அதன் மின்சார உற்பத்தி பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நீர்தேக்கத்தை அண்டிய பகுதியில் உள்ள மக்களை அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

(tamilnews DMC danger leveled area due increase Atanakalai river)

More Tamil News

Tamil News Group websites :