நிஷாந்த, ஜகத் ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்

0
425
sanath nishantha further remanded

(sanath nishantha further remanded)
சுதந்திர கூட்டமைப்பின் புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த மற்றும் அவரின் சகோதரரான ஆரச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த ஆகிய இருவரும் எதிர்வரும் 7ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆராச்சிக்கடுவை பிரதேச சபை செயலாளர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக சிலாபம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறித்த வழக்கில் பிணை வழங்கும் வேளையில் வாரத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளித்து கையொப்பமிட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

எனினும் 2017 ஆகஸ்ட் மாதத்திலிருந்து பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்கவில்லை என குறித்த இரு நபர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை