மலேசியாவில் அமைச்சர்களின் சம்பளம் 10 வீதம் குறைக்கப்படுகின்றது: மகாதீர் அறிவிப்பு!

0
695
Ministers salary cuts 10 percent, malaysia tami news, malaysia, malaysia news, mahathir,

{ Ministers salary cuts 10 percent }

மலேசியா: அமைச்சர்களின் சம்பளம் 10 விழுக்காடு குறைக்கப்படுவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்துள்ளார். புதன்கிழமை அமைச்சரவை கூட்டத்துக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது டாக்டர் மகாதீர் இதனை அறிவித்துள்ளார்.

நாட்டின் கடன் சுமை ஒரு டிரில்லியனை எட்டியிருக்கிறது. இந்நிலையில் வாழ்க்கை செலவினமும் அதிகரித்துள்ளது. இதில் அமைச்சர்கள் ஏக போக வாழ்க்கையை வாழ்வதற்குப் பதில் அவர்களின் சம்பளத்தில் 10 விழுக்காடு பிடித்தம் செய்ய அனைத்து அமைச்சர்களும் ஒப்பு கொண்டுள்ளதாக துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களைக் காட்டிலும் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ள சில அதிகாரிகள் அதிக சம்பளத்தைப் பெறுகின்றனர். அவர்களும் நாட்டின் கடனில் பங்குப் பெற நினைத்தால் தங்களின் சம்பளத்தை சிறிதளவு பிடித்தம் செய்ய அனுமதிக்கலாம் என்று மகாதீர் கூறியுள்ளார்.

1981 ஆம் ஆண்டில் தாம் முதல் முறை பிரதமராக பதவியேற்றபோது , அப்போதைய அமைச்சர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ததையும் மகாதீர் செய்தியாளர்கள் சந்திப்பில் நினைவு கூர்ந்தார். முந்தைய அரசாங்கத்தின் பிரதமர் அவ்வபோது செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவதில்லை.

குறிப்பாக அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுவதில்லை. ஆனால் நான் சர்வதிகாரி இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவே செய்தியாளர்களை அவ்வபோது சந்திக்கிறேன் என மகாதீர் தெரிவித்துள்ளார்.

Tags: Ministers salary cuts 10 percent

<< RELATED MALAYSIA NEWS>>

*ஊடக சுதந்திரத்துக்கு முன்னுரிமை ..! கோபிந்த் சிங்

*மலேசியா முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் நான்கு மணி நேரம் விசாரணை !

*லிங் லியோங் சிக் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நஜிப்..!

*முன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்!

*துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..!

*ஜொகூர் சுல்தானுடன் 2 மணி நேரம் சந்திப்பு நடத்திய அன்வார்!

*எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்!

*நஜீப்பின் வழக்கில் இனி நாங்கள் வாதாட மாட்டோம்..! வழக்கறிஞர்கள்

*நாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..!

*கேவியஸ் மீது சட்ட நடவடிக்கை! -மெக்லின் எச்சரிக்கை

*பினாங்கில் பிரிட்டிஷ் பிரஜையை கொடூரமாக தாக்கிய இருவர் கைது..!

*மலேசியரான எவரெஸ்ட் நாயகன் ராமன் நேப்பாளில் சடலமாக மீட்பு..!

<<Tamil News Groups Websites>>