உலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்

0
2787

Harry Megan Wedding Event Photos

பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது.

சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டேவிட் பெக்ஹாம், ஒபெரா வின்ப்ரே, இத்ரிஸ் எல்பா என பல பிரபலங்கள் தற்போது நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் தம்பதிகளை வாழ்த்த சுமார் 1 இலட்சத்துக்கும் அதிக பொதுமக்கள் அங்கு குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Photo Credits : AP