வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை

0
824
Inquiry former ministers Northern Province

(Inquiry former ministers Northern Province)
வடக்கு மாகாண சபையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை சட்டரீதியாக விசாரணை செய்து தண்டனை வழங்குவதற்காக மேலுமொரு விசாரணையை நடத்துவதற்கு பிரதம செயலாளரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண சபையின் 122 ஆவது அமர்வு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது.

இதன்போது, வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மீது முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணை நடத்தியதுடன், அந்த விசாரணை குழுவின் அறிக்கை வெளியாகிய பின்னரும், அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பாக மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

அதற்கான காரணம் என்னவென எதிர்கட்சித் தலைவர் சி. தவராசா முதலமைச்சரிடம் வாய்மொழி மூல வினாவொன்றை எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது முதலமைச்சர் மேலும் கூறுகையில், கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களின் செயலாளர்களை மாற்றம் செய்யாமல் நடத்தப்படும் விசாரணை பலனளிக்காது என்பதாலேயே நாம் அமைதியாக இருந்தோம். இப்போது அந்த அமைச்சுக்கள் இரண்டினதும் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

ஆகவே இதன்போது சட்டரீதியாக விசாரித்து குற்றவாளிகள் என்றால் சட்டரீதியாக தண்டணை வழங்குவதற்கான விசாரணைக்குழு ஒன்றுக்காக பிரதம செயலாளரிடம் பரிந்துரை செய்துள்ளேன் என்றார்.

இதனைத் தொடர்ந்து கருத்து கூறிய எதிர்கட்சி தலைவர் ‘ஆட தெரியாதவன் மேடை சரியில்லை’ என்றானாம் என்றும் கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Inquiry former ministers Northern Province