மாணவர்களின் செயற்பாடு மன வருத்தத்தைத் தருகின்றது – வடக்கு முதலமைச்சர்

0
438
north province chief minister vickneshwaran decide several party contest

(tamilnews jaffna campus student may 18 rememberance CVV)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு மன வருத்தத்தைத் தருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடல் பங்கேற்று கருத்துக்களை வழங்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும், முதலமைச்சரின் அழைப்பை ஏற்பதில்லை எனவும் கலந்துரையாடலில் பங்கேற்பதில்லை எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்தது.

அவர்களின் இந்தச் செயற்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது மனவருத்தத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் துரதிஷ்டவசமாக இன்றைய கலந்துரையாடலுக்கு வராமல் தவிர்த்தனர்.

இது எங்களுக்கு மிகவும் மன வருத்தத்தைத் தருகின்றது. மாணவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் அல்ல.

பல்கலைக்கழகத்தின் ஊடாக வந்தவர்கள்தான் நாங்களும். ஆகவே அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் அல்ல.

ஏதோ சில பிழையான கருத்துக்கள் அவர்களை ஆட்டிப்படைப்பதாக நான் காண்கின்றேன்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தும் எண்ணம் அவர்களுக்கு இருக்கின்றது என்றால், முதன்முதலில் எம்முடன் வந்து கலந்து ஆலோசித்திருக்கலாம்.

2-3 மாதங்களுக்கு முன்னர் வந்து, “இவ்வாறு நாம் செய்ய இருக்கின்றோம். எங்களுக்கு செய்வதற்கு பிரியமாக விருக்கின்றது” எனக் கூறியிருக்கலாம்.

எங்களுடைய உறுப்பினர்களையும் சேர்த்து அவர்களுடன் பேசி, நாங்கள் அதனைக் கொண்டு நடத்தியிருக்கலாம்.

“நாங்கள் செய்யப் போகின்றோம் எல்லோரும் வந்து சேருங்கள்” என்று அவர்கள் கூறியது வருத்தப்படவேண்டிய செயல்.

ஏனெனில், ஒவ்வொருவரும் வந்து சொல்லலாம், நாங்கள் செய்கின்றோம் – நீங்கள் வந்து சேருங்கள் என்று.

உத்தியோகபூர்வமாகத்தான் நாம் இந்த விடயத்தில் உள்நுழைந்துள்ளோம்.

3 வருடங்களாக செய்து வந்துள்ளோம் – அதனை முன்னெடுக்கும் காணி எமது அமைச்சின் கீழ் வருகின்றது.

மாகாணத்தின் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற வகையில் எமக்கு அந்த உரித்து இருக்கின்றது.
ஆகவே நாங்கள் உத்தியோகபூர்வமாக எமது கடமைகளைச் செய்துகொண்டிருக்கின்றோம்.
எனவே இதில் ஏதாவது திருத்தங்கள் செய்யவேண்டுமாயின் பல்கலைக்கழக மாணவர்கள் எம்முடன் வந்து பேசியிருக்க வேண்டும்.

அவர்கள் அவ்வாறு செய்யாதது எமக்கு மன வருத்தமாக உள்ளது – என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் முதன்மைச் சுடரை போரில் உறவுகளை இழந்தவர்கள் சார்பில் ஒருவரே ஏற்றிவைப்பார்.

அதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொது மக்களின் சார்பில் பொதுப் பிரகடனம் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்படும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் துளசி தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையால் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் முதன்மைச் சுடரை வடக்கு மாகாண முதலமைச்சரே ஏற்றிவைத்தார்.

ஏனைய சுடர்களையே போரில் உறுவுகளை இழந்த மக்கள் ஏற்றிவைத்தனர்.

இந்தநிலையில் இம்முறை அந்த நடைமுறை பின்பற்றப்படாது என்று முடிவு எட்டப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் முதன்மைச் சுடரை போரில் உறவுகளை இழந்தவர்கள் சார்பில் தாயார் ஒருவரே ஏற்றிவைப்பார் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் திட்டமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே இந்த முடிவை ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் துளசி தெரிவித்தார்.

(tamilnews jaffna campus student may 18 rememberance CVV)

More Tamil News

Tamil News Group websites :