அக்டோபரில் தானாம் சோனம், ஆனந்த் ஹனிமூன். எதற்காக சோனம் இப்படி தள்ளி போட்டார்?

0
1218

(Sonam Kapoor Aananth Ahuja Wedding Honeymoon Plan October)

இன்று மும்பையில் கோலாகலமாக நடைபெறவுள்ள சோனம் கபூர் மற்றும் ஆனந்த் அஹுஜா திருமணத்தை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் இருக்க, இவர்களின் ஹனிமூன் வருகிற செப்டம்பர் இல்லாவிட்டால் அக்டோபரில் தானாம் என்று கபூர் குடும்பத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

சோனம் கபூர் இந்தி சினிமாவில் மிகவும் பிரபல்யமான நடிகை மட்டுமல்லாமல் ரொம்ப பிஸியான நடிகையும் கூட.

இதனால் தான் கமிட் ஆனா திரைப்படங்களை வெகு சீக்கிரம் முடித்து விட்டு தேனிலவு செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளது.

அத்தோடு வருகின்ற மே மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் சோனம் சிவப்புக்கம்பள வரவேற்பில் கலந்து கொள்ளவுள்ளதாலும் ஹனிமூனை இந்தளவு தள்ளி போட்டுவைத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

Tag: Sonam Kapoor Aananth Ahuja Wedding Honeymoon Plan October