இந்தியாவில் இருந்து தப்பி வந்த 12 இலங்கையர்கள் கைது

0
818
12 sri lankans arrested Kankesanthurai sea

இந்தியாவில் இருந்து தப்பி வந்த இலங்கையர்கள் 12 பேர் காங்கேசன் துறைமுகம் அருகில் உள்ள கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போர் காரணமாக இலங்கையில் இருந்து தமிழர்கள் இந்தியாவுக்கு தப்பி சென்று பல காலமாக இந்தியாவில் தஞ்சம் அடைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களில் பலர் இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, அகதிகள் முகாம்களில் உள்ளவர்கள் மீண்டும் இலங்கைக்கு தப்பிசெல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தும் வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையின் காங்கேசன் துறைமுகம் அருகே பாக் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு படகை அவர்கள் சோதனையிட்டனர்.

அந்த படகில் சிலர் முறையான ஆவணங்கள் இல்லாமல் பயணித்தது தெரியவந்தது. உடனே அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அந்த படகில் பயணம் செய்த நான்கு குழந்தைகள் உட்பட 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் காங்கேசன் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 12 பேரையும், மே 19 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.