நிறைவேற்று அதிகார முறை அவசியம்

0
375
Chamal Rajapakse urged Rajapaksa family unite rise forces Sri Lanka

executive power president former parliament speaker

நாட்டை ஸ்திரப்படுத்துவதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அவசியம் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கண்டி பிரதேசத்தில் வைத்து இன்று ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பல்வேறு காரணங்களுக்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இருக்க வேண்டும் என்று அவர் கூறுகின்றார்.

நாட்டில் இடம்பெறுகின்ற சில நிகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் அவ்வாறான அதிகாரம் உள்ள ஜனாதிபதி நாட்டில் இருக்காவிட்டால் இன்று நாட்டின் சிறு துண்டு கூட எஞ்சியிருக்காது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் நிறைவேற்று அதிகாரத்தில் சில அதிகாரங்கள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனை முழுமையாக அகற்றுவதற்கு 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினை மேற்கொள்ளுமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
executive power president former parliament speaker

More Tamil News

Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here