Type to search

தாய்ப்பாலை அதிகரிக்கும் பால்சுறா குழம்பு

FOOD

தாய்ப்பாலை அதிகரிக்கும் பால்சுறா குழம்பு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(Breastfeeding Milk Increase Palcura Curry Recipe)

தேவையான பொருட்கள் :
* பால் சுறா – 250 கிராம்
* தேங்காய் – அரை மூடி (துருவிக்கொள்ளவும்)
* புளி – ஒரு சிறிய உருண்டை (இந்த குழம்புக்கு புளி அதிகம் தேவையில்லை)
* பூண்டு – 4 பல் (தட்டிக் கொள்ளவும்)
* சீரகம் – 2 டீஸ்பூன்
* மிளகு – ஒரு டீஸ்பூன்
* மல்லி (தனியா) – 2 டீஸ்பூன்
* சுக்கு – ஒரு சிறிய துண்டு (அம்மியில் வைத்துத் தட்டவும்)
* காய்ந்த மிளகாய் – ஒன்று
* கடுகு – ஒரு டீஸ்பூன்
* வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
* மஞ்சள்தூள் – 2 சிட்டிகை
* கறிவேப்பிலை – சிறிது
* நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
* உப்பு – தேவையான அளவு

செய்முறை :
* புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

* பால் சுறாவை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவிக் கொள்ளவும்.

* பூண்டைத் தட்டிக்கொள்ளவும்.

* தேங்காய்த் துருவலுடன் மிளகு, சீரகம், மல்லி (தனியா), தட்டிய சுக்கு, காய்ந்த மிளகாய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.

* தட்டிய பூண்டைச் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர், புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாடை போகும்வரை நன்கு கொதிக்கவிடவும்.

* நன்றாகக் கொதித்ததும் பால் சுறாவைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். அதிகம் கிளற வேண்டாம். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.

* சூப்பரான பால்சுறா குழம்பு ரெடி.

<<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>

நாவில் எச்சில் ஊற வைக்கும் ஆட்டுக் குடல் குழம்பு

காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்

சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!

 

<<TAMIL NEWS GROUP SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/
Web Title : Breastfeeding Milk Increase Palcura Curry Recipe

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *