Vélib துவிச்சக்கரவண்டி சேவைகள் விரைவில் மூடப்பட உள்ளதா?

8
933
Velib bicycle services lost 71000 users

Vélib வாடகை துவிச்சக்கரவண்டி சேவைகள் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டு வருகின்றது. இதனால், கடந்த நான்கு மாதத்தில் 71,000 பயனாளர்கள் தங்களில் சந்தாவில் இருந்து வெளியேறியுள்ளனர்.Velib bicycle services lost 71000 users

இது அந்நிறுவனத்திற்கு பெரும் இழப்பாகும். இந்த இழப்பை தவிர்க்கும் முகமாக, உடனடி தீர்வு ஒன்றை பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ கோரியுள்ளார்.

கடந்த டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஒப்பந்தம் முடிவடைந்ததனால் JC Decaux நிறுவனத்திடமிருந்து, புதிய நிறுவனமான Smovengo நிறுவனத்துக்கு இச் சேவைகள் மாற்றப்பட்டது. eBikes என அழைக்கப்படும் தானியங்கி மின்சார வண்டிகளை மின்னேற்ற, முன்னர் இருந்த பழைய தரிப்பிடங்கள் போதுமானதாக இல்லை.

இதனால் புதிய நிலையங்கள் அமைக்கப்படவேண்டிய தேவை ஏற்பட்டது. ஜனவரி 1 ஆம் திகதிக்கு முன்னதாகவே புதிய நிலையங்கள் அமைக்கப்படும் பணிகள் ஆரம்பித்திருந்த போதும், தற்போது, ஏப்ரல் 30 ஆம் திகதி வரை 1,400 நிலையங்களுக்கு பதிலாக 670 நிலையங்கள் மாத்திரமே தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த இடைவெளிக்குள், கடந்த 4 மாத நிறைவில் 24.1 வீத பயனாளர்கள், தங்கள் சந்தா சேவையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**