சட்டவிரோத குடியேற்றவாசிகளை பிரான்ஸிற்கு நாடு கடத்தியதாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிப்பு

0
663
France escorting migrants released, France escorting migrants, France escorting, escorting migrants released, migrants released, Tamil Swiss news

(France escorting migrants released)

சட்டவிரோதமாக குடியேறிய 30 பேரை இத்தாலியில் இருந்து பிரான்ஸுக்குள் பிரவேசிக்க உதவியதாக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் மற்றும், ஒரு இத்தாலிய பெண் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் மூவரும் முன் விசாரணைக் காவலில்  இருந்து நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சுவிஸ் நாட்டை சேர்ந்த இருவரும் முறையே 26 மற்றும் 24 வயதைச் சேர்ந்தோர்.

100 க்கும் அதிகமான பிரஞ்சு மற்றும் இத்தாலியர்களோடு இத்தாலிய எல்லையில் உள்ள Montgenèvre கணவாய் பகுதியை சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் கைது செய்யப்பட்ட இரு சுவிஸ்வாசிகளும் கடந்தனர்.

சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை எதிர்த்து ஆல்ப்ஸ் பகுதிக்கு அடுத்துள்ள Echelle கணவாயில், பான்-ஐரோப்பிய இயக்கத் தலைமையின் தீவிர வலதுசாரி ஆர்வலர்கள், சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுத்து வைத்ததால் இவர்கள் இலகுவாக கைது செய்யப்பட்டனர் என பொலிசார் கூறினர்.

France escorting migrants released, France escorting migrants, France escorting, escorting migrants released, migrants released, Tamil Swiss news

தெற்கு அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக சுவிஸ் விவசாயிகள்

Tamil News Groups Websites

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here