ரஜினியின் 2.0 வெளி வருமா?

9
1187
France filed case Lyca Mobile company cash fraud tax evasion

தமிழ்த் திரையுலகில் பாரிய பொருட்செலவில் திரைப்படங்களை தயாரித்துவரும் லைகா நிறுவனம் மீது பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. France filed case Lyca Mobile company cash fraud tax evasion
Lyca மொபைல் நிறுவனம் தனது வங்கிக் கணக்குகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் பிரான்ஸ் அரசு Lyca நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளது.

ஒரு வருடத்திற்கு 10,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் லைகா மொபைல் நிறுவனம் உரிய முறையில் வரி செலுத்துவதில்லை என பிரான்ஸ் புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பிரிட்டனின் உள்ள லைகா நிறுவனத்தில் சோதனை செய்ய பிரான்ஸ் அனுமதி கோரியபோது, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே கட்சி மற்றும் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் பெயரில் இயங்கும் தொண்டு நிறுவனத்திற்கு லைகா நிறுவனம் அதிக அளவில் நன்கொடை கொடுப்பதன் காரணமாகவே சோதனைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

மேலும், லைகா நிறுவனம் ரஜினி நடிப்பில் 2.0 படத்தை தயாரித்துவரும் நிலையில், இந்தியன் 2 படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த நிறுவனம் மீதான புகாரில் பிரான்ஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதன் எதிரொலி தமிழ் திரையுலகில் பிரதி பலிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**