டாக்டர் ஶ்ரீராம் விவகாரம்: வாக்குகளுக்காக எதிர்க்கட்சி நாடகம்..!

0
796
Shiram affair Opposition drama votes, Shiram, malaysia 14 election, malaysia, paktan harappan,

{ Shiram affair Opposition drama votes }

மலேசியாவின் 14-ஆவது பொதுத் தேர்தலில் இந்தியர்கள் தங்களுக்கு வாக்களிக்கும் பொருட்டு, எதிர்க்கட்சி கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் நாடகம் நடத்துகின்றது என்று நெகிரி செம்பிலான் மாநில மந்திரி ‘பெசார் டத்தோஶ்ரீ முகமட் ஹசான்’ கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் வேட்பாளர் அட்டையை அணிந்திராத காரணத்திற்காக ரந்தாவ் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை டாக்டர் எஸ். ஶ்ரீராம் இழந்ததை தொடர்ந்து, அந்தத் தொகுதியில் போட்டியின்றி முகமட் ஹசான் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ரந்தாவ் தொகுதியிலுள்ள இந்தியர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள பக்காத்தான் கூட்டணி நாடகம் நடத்துவதாக முகமட் ஹசான் கூறியுள்ளார்.

ரந்தாவ் தொகுதியில் கிட்டத்தட்ட 27 வீதத்தினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“தேசிய முன்னணி மற்றும் அம்னோ உறுப்பினர்கள்பந்த வேட்பாளர் வேட்பு மனுவை சமர்ப்பிக்க அனுமதிக்கவில்லை என்று பக்காத்தான் கூட்டணி பொய்யுரைத்து வருகின்றது. ஆனால், உண்மை அதுவல்ல. அவர்களின் வேட்பாளர் தேர்தல் ஆணையத்தின் அட்டையை அணிந்து வரவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “துன் மகாதீர் அந்த அட்டையை அணிந்து வந்தார். நஜிப் அணிந்து வந்தார். டாக்டர் ஶ்ரீராம் அந்த அட்டையை அணிந்து வரவில்லை. அது தவறாகும். அந்த அடிப்படையில் தான் அவர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை” என்று கூறினார்.

தேர்தல் ஆணையத்தைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு, தனக்கு எதிராக யாரும் போட்டியிடக் கூடாது என்று தாம் செயல்பட்டதாக பக்காத்தான் பொய்யுரைத்து வருவது நாடகத்தன்மையாக இருப்பதாக ஹசான் கூறியுள்ளார்.

Tags: Shiram affair Opposition drama votes

<<MOST RELATED CINEMA NEWS>>

*தமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடிதம்: உள்ளே இருந்தது நிர்வாணப் படம்!

*மலேசிய வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

*துன் மகாதீரை மருத்துவமனைக்கு அனுப்புவதா? எதிர்கட்சியின் சதி வேலை அம்பலம்..!

*சம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்!

*கிரேப்’ சேவை ஒழிப்பேன் என்று கூறிய மகாதீர்: தற்போது மறுப்பது ஏன்..?

*பதவி விலகல் கடிதத்தை மீட்டுக் கொள்கின்றேன்! -கேவியஸ் திடீர் அறிவிப்பு

*தேசிய முன்னணி-பக்காத்தான் ஹாராப்பான் இடையில்தான் போட்டியா..?

*தேர்தல் பிரச்சாரத்தில் பொய்யான தகவல்களை பரப்புவது எதிர்க்கட்சிகள்: நஜிப் அறிவிப்பு..!

<<Tamil News Groups Websites>>