முச்சக்கரவண்டியில் கடத்த முயற்சி; இரண்டு பிள்ளைகளின் தாய் மரணம்

0
1349
Try kidnap three wheeler 28 year old woman death

(Try kidnap three wheeler 28 year old woman death)
முச்சக்கரவண்டியில் கடத்த முற்பட்ட பெண்ணொருவர், தப்பிக்க முயற்சித்த போது உயிரிழந்த சம்பவம் மதுகமை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மதுகடை வோகன் தோட்டத்தில் வசிக்கும் 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயின் உயிரிழப்பு தொடர்பில் மதுகமை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மதுகமை பிரதேசத்தில் இருந்து நேபொட பிரதேசத்தில் தனது இல்லத்திற்கு செல்வதற்கு குறித்த பெண் முச்சக்கரவண்டியில் சென்றுள்ளார்.

முச்சக்கரவண்டி தவறான பாதையில் செல்வதைக் கண்டு பயந்து, வண்டியில் இருந்து தப்பிப்பதற்காக கீழே பாய்ந்துள்ளார்.

இதன்போது, விபத்துக்குள்ளாகி உயிரிக்கு போராடிய நிலையில் வீதியில் வீழ்ந்து கிடந்த குறித்த பெண்ணை மீட்ட உறவினர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகவும் மரண விசாரணைக்காக குறித்த பெண்ணின் சடலத்தை களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; Try kidnap three wheeler 28 year old woman death

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here