அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!

0
790
Tottenham hotspur vs Watford news Tamil

(Tottenham hotspur vs Watford news Tamil)

பிரீமியர் லீக் தொடரின் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

பிரீமியர் லீக்கின் நேற்றைய லீக் போட்டியில் டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் அணி, வட்போர்ட் அணியை எதிர்கொண்டது.

போட்டியில் ஆரம்பம் முதல் அபாரமாக ஆடிய டொட்டென்ஹம் அணி எதிரணிக்கான வாய்ப்புகளை குறைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

முதற்பாதியின் 16வது நிமிடத்தில் மொஹமது அலி கோலடித்து அணியை முன்னிலைப்படுத்த, முதற்பாதியில் டொட்டென்ஹம் அணி 1-0 என முன்னிலைப்பெற்றது.

தொடர்ந்து இரண்டாவது பாதியின் 3வது நிமிடத்தில் மீண்டும் டொட்டென்ஹம் அணி கோலடித்தது. ஹரி கேன் இந்த கோலை போட்டியின் 48வது நிமிடத்தில் பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி போட்டியின் இறுதிவரை வட்போரட் அணி கோலடிக்கத தவறிய நிலையில், டொட்டென்ஹம் அணி 2-0 என வெற்றிபெற்றது.

டொட்டென்ஹம் அணி பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 71 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த தொடரின் முதலிடத்தை மென்செஸ்டர் சிட்டி அணி தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>