அரபிக் கல்லூரி மாணவன் மீது தாக்குதல் – மூதூர் பொலிஸார் விசாரணை

0
558
tamilnews mutur trinco arabic school student beated

(tamilnews mutur trinco arabic school student beated)
திருகோணமலை மூதூர் ஜின்னா நகர் ‘பஜதுல் உலூம் அரபிக் கல்லூரியில்’ கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மீது அதிபரும், அந்த கல்லூரியில் கல்வி கற்றுக் கொடுக்கும் மௌலவி ஒருவரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இதன் விளைவாக படுகாயமடைந்த நிலையில் மாணவர் ஒருவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மூதூர் பொலிஸார் கிண்ணியா வைத்தியசாலைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவன் கிண்ணியா பெரியாற்றுமுனை பகுதியைச் சேர்ந்த அமீன் – முகம்மது பாசீத் (வயது – 16) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவரை அதிபர் அழைத்து கன்னத்தில் அரைந்ததாகவும், இதன்போது மௌலவி ஒருவர் பனை மட்டையால் தாக்கியதாகவும், இந்தச் சந்தர்ப்பத்தில் மாணவர் கீழே விழவும் அந்த மாணவர் மீது ஏறி மீதித்து தாக்கியதாகவும் மாணவனின் பெற்றோர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் விசாரணையை மேற்கொண்ட மூதூர் பொலிஸார் பாதிக்கப்பட்ட மாணவனை பார்வையிட்டனர்.

மாணவனில் உடம்பில் 29 இடங்களில் காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாணவர் மீது எதற்காக தாக்குதல் இடம்பெற்றது என்பது குறித்து பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

(tamilnews mutur trinco arabic school student beated)

More Tamil News

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here