காவிரி வரைவு செயல் திட்டம்- மேலும் 2 வாரம் அவகாசம் கேட்கிறது மத்திய அரசு

0
567
Government petition Court seeking further 2 weeks draft Cauvery case.

(2 weeks draft Cauvery case)

காவிரி விவகாரத்தில் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் கோரி இந்திய உயர்நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நீர் பங்கீடு தொடர்பான திட்டத்தை 6 வார காலத்துக்குள் செயல்படுத்தத் தவறிய மத்திய அரசு கால அவகாசம் முடியும் நிலையில், ஸ்கீம் என்றால் என்ன என்று கேட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மே 3 ஆம் திகதிக்குள் காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில்இ காவிரி விவகாரத்தில் வரைவு திட்டம் இன்னும் தயாராகாததால் மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு இன்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு எதிர்வரும் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

எதிர்வரும் 3ஆம் திகதிக்குள் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட நிலையில், அன்றைய தினம் ஸ்கீம் என்றால் என்ன என்று கேட்டு தாக்கல் செய்யப்பட்ட காவிரி நீர் தொடர்பான மத்திய அரசின் மனு விசாரணைக்கு வரும் அன்றைய தினமே இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

எதிர்வரும் 3ஆம் திகதி காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உறுதியாக தெரிவித்திருந்த நிலையில், மேலும் 2 வார கால அவகாசம் கோரப்பட்டிருப்பது தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டே காவிரி விவகாரத்தில் தீர்வு காண மத்திய அரசு கால தாமதம் செய்து வருவதாக தமிழகத்தின் சார்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. தற்போது எதிர்வரும் 3ஆம் திகதிக்கு பதிலாக மேலும் 2 வார கால அவகாசம் கேட்டிருப்பது அதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

ஏனென்றால் கர்நாடக சட்டப்பேரவைக்கு எதிர்வரும 12-ஆம் திகதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

(Government petition Court seeking further 2 weeks draft Cauvery case)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here