வவுனியாவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

0
651

வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் நேற்றையதினம் (24) கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 26 வயதுடைய சந்திரபாலசிங்கம் பிரதாபன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர். குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே இளைஞரின் சடலம் மீட்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.