மயக்க ஊசி போட்டு இளம்பெண் பாலியல் துஸ்பிரயோகம்; வைத்தியசாலைக்குள் அரங்கேறிய சம்பவம்

0
121

உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 28 வயதான இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு நோய்க்கான ஊசி எனக்கூறி ஊழியர் ஒருவர் மயக்க ஊசி போட்டுள்ளார். இதனால் மயக்கமடைந்த அந்த பெண்ணை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அதிர்ச்சி அடைந்த குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுக் குறித்த ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.