உக்ரைனில் அலங்கோலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்! ரஷ்யா துருப்புகள் அநியாயம்

0
504

உக்ரைனில் 16 வயது மகளை பல நாட்களாக தேடி வந்த அவர் தாயாருக்கு சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட அவரின் சடலம் கிடைத்துள்ளது.

உக்ரைனில் ரஷ்ய போர் தாக்குதல் 47வது நாளாக நடந்து வருகிறது. ரஷ்ய துருப்புகள் நாட்டின் பல இடங்களை நாசமாக்கியுள்ள நிலையில் பெண்களை சீரழித்து கொலை செய்யும் கொடூரத்தையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் புச்சாவில் 16 வயது டீன் ஏஜ் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி கரீனா என்ற 16 வயது டீன் ஏஜ் பெண் ரஷ்ய வீரர்களால் சீரழிக்கப்பட்டு, தலையில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.