விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் ஜோடி!

0
841

கதிர்காம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஜோடி ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்சோகத்திஅ ஏற்படுத்தியுள்ளது.

கதிர்காமம் கலஹிட்டிய வீதியில் மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்துடன் மோதியதில் இளம் ஜோடி ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் ரசிதகுமார மற்றும் பிரியங்கிகா லக்ஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.