‘கிராமி’ விருதை தட்டிச்சென்ற சக்தி இசைக்குழு!
இசைத்துறையில் மிகவும் உயரிய விருதான ‘கிராமி’ விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவில் நடைபெற்று வரும் நிலையில் சங்கர் மகாதேவன், கணேஷ் ராஜகோபாலன், செல்வகணேஷ் விநாயக்ராம், ஜாகீர் உசேன் ஆகியோர் உள்ளடங்கிய இந்தியாவின் சக்தி இசைக் குழுவுக்கு இந்த உயரிய ‘கிராமி விருது’ கிடைத்துள்ளது. இந்த சக்தி ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன.


‘யாத்ரா – 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
நடிகர்கள் மம்முட்டி, ஜீவா நடிப்பில் தயாராகியுள்ள ‘யாத்ரா – 2’ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மறைந்த ஆந்திர முதல் – மந்திரி வை.எஸ் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை கதை ‘யாத்ரா’ எனும் பெயரில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதல் மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை கதை ‘யாத்ரா – 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற 08ஆம் திகதி வெளியாகவுள்ளது.